இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சர்வம் தாளமயம்’. இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார். அதே போல் முதல் முறையாக ஜி.வி. நடிக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்படம் திரைக்கு வருவதற்கு முன்னதாக 31-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, நல்ல விமர்சனங்களைப் பெற்றது. மேலும், தனக்கு நெருக்கமான நண்பர்களுக்கும் படத்தைத் திரையிட்டுக் காட்டி வருகிறார் ராஜீவ் மேனன்.

அந்த வகையில் இதுவரை,  இந்திய கிரிக்கெட் வீரர் கும்ப்ளே, இயக்குநர் பாலா, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இயக்குனர் வசந்த பாலன்  உள்ளிட்ட பலரும் இப்படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளனர். 

இந்நிலையில் தற்போது ஜி.வி.பிரகாஷ் சற்று ட்விட்டர் கணக்கில் ஒரு தகவலை பதிவு செய்துள்ளார். அது என்னவென்றால்... அதாவது நடிகை ஐஸ்வர்யா ராய் 'சர்வம் தாளமயம்' படத்தின் இரண்டாவது பாடலை நாளை மாலை 6 மணியளவில் வெளியிட உள்ளதாக கூறியுள்ளார்.