கர்நாடகாவை சேர்ந்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் கடந்த 2015 ஆம் ஆண்டு 'கோஹிநூர்' என்னும் மலையாள படத்தில் அறிமுகமானார். இந்த திரைப்படம் இவருக்கு மிகபெரிய வெற்றியை கொடுக்கா விட்டாலும்... இந்த படத்தை தொடர்ந்து இவர் கன்னடத்தில் நடித்த 'யூ டர்ன்' படம் இவருக்கு சிறந்த நடிகை என்கிற பிலிம் ஃபேர் விருது, SIIMA உள்ளிட்ட விருதுகளை பெற்று தந்தது. 

இவர் தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய, 'காற்று வெளியிடை' படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்தார். பின் மற்ற மொழிகளை விட தமிழ் மொழி படங்களில் பிஸியாக நடிக்க துவங்கினார். அந்த வகையில் இவர் நடித்த 'விக்ரம் வேதா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.

மலையாளம், கன்னடம், தமிழை தொடர்ந்து தற்போது பாலிவுட் திரையுலகில் கால் பதித்துள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.  மேலும் அவர்  Milan Talkies என்ற பாலிவுட் படத்தில் நடித்து வரும் இவரிடம், ஹிந்தியில் நடிப்பது பற்றி கேட்டதற்கு "தனக்கு பெரிய வித்யாசம் தெரிகிறது என்றும் (பாலிவுட்டில்) இருப்பவர்கள் அதிக ஒழுக்கமாகவும், திறமையானவர்களாகவும் இருக்கின்றனர்" என கூறியுள்ளார்.

இவர் இப்படி கூறியுள்ளது, பாலிவுட் திரையுலகில் தான் அனைவரும் ஒழிக்கமாக இருக்கின்றனர் மற்ற திரையுலகினர் ஒழுக்கமற்று இருப்பது போல் உள்ளது கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.