‘பீஸ்ட்’ படத்தில் மற்றொரு வில்லனாக செல்வராகவன் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் தற்போது நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பில் பரபரப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தில் முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தினர். தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு, சென்னையில் தான் நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக 3 முக்கிய நடிகர்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பல மலையாள படங்களில், நடித்து பிரபலமான நடிகர் மற்றும் துணை இயக்குனருமான ஷைன் டாம் சாக்கோ வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் சமீபத்தில் சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்த படி இயக்குநர் செல்வராகவன் இந்த படத்தில் இணைந்துள்ளார். 

‘பீஸ்ட்’ படத்தில் மற்றொரு வில்லனாக செல்வராகவன் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த சபீர் கலரக்கல் 3வது வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த கதாபாத்திரத்தை மட்டுமே தனியாக வைத்து ஒரு படம் எடுக்கவேண்டுமென பா.ரஞ்சித்திற்கு கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் இப்படியொரு தகவல் கசிந்துள்ளது ரசிகர்களிடையே ஆர்வத்தை அதிகரித்துள்ளது.