Asianet News TamilAsianet News Tamil

நான் யாருனு நிரூபிக்கிற நேரம் இது! வெறித்தனமான பாக்சிங் காட்சிகளோடு வெளியான 'சார்பட்டா பரம்பரை' ட்ரைலர்!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடித்திருக்கும் 'சார்பட்டா பரம்பரை' படம் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் வெறித்தனமான ட்ரைலர் வெளியாகியுள்ளது.
 

sarpatta parambarai movie trailer released
Author
Chennai, First Published Jul 13, 2021, 12:52 PM IST

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடித்திருக்கும் 'சார்பட்டா பரம்பரை' படம் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் வெறித்தனமான ட்ரைலர் வெளியாகியுள்ளது.

ஆர்யாவின் 30வது படமாக உருவாகியுள்ள 'சார்பட்டா பரம்பரை' படத்திற்காக மிக கடுமையான உடல் பயிற்சிகள் செய்து நடித்துள்ளார். இவர் மட்டும் இன்றி, இவருடன் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் பல்வேறு கடுமையான உடல் பயிற்சிகள் மற்றும் பாக்ஸிங் கற்று கொண்டுதான் நடித்துள்ளனர். இந்த படத்தை 'மெட்ராஸ்', 'காலா', 'கபாலி' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குகிறார். கே 9 ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. ஆர்யா, இப்படத்தில்...  வடசென்னை வாலிபராகவும், பாக்ஸராகவும் நடித்துள்ளார்.

sarpatta parambarai movie trailer released

1980 ஆம் ஆண்டுகளில் வடசென்னையில் நடத்தப்படும் பாக்ஸிங் போட்டியில், இடியாப்பா பரம்பரைக்கும், சார்பட்டா பரம்பரைக்கும் நடக்கும் போட்டியை மையமான வைத்து தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள ட்ரைலரை வைத்து பார்க்கும் போது, இடியாப்ப பரம்பரையை சேர்ந்த... வேம்புலி என்பவரை, சர்பட்டா பரம்பரையை சேர்ந்த பாக்ஸர்களால் வீழ்த்த முடியவில்லை.

sarpatta parambarai movie trailer released

அதே நேரத்தில் ஆர்யா பாக்சிங் விளையாட எதிர்ப்புகளும் தெரிவிக்கப்டுடுகிறது. இவை அனைத்தையும் கடந்து, ஆர்யா எப்படி ஒரு பாக்ஸராக மாறி, வேம்புலியை தோக்கடிக்கிறார் என்பதை, உணர்வு பூர்வமாகவும், அதிரடி காட்சிகள், காதல், திருமணம், போன்ற அனைத்தும் கலந்த கலவையாக உருவாகியுள்ளது 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம். 

sarpatta parambarai movie trailer released

ஜூலை 22 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் இந்த படம் ரிலீசாக உள்ளது. மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம், திரையரங்கில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியாவது ரசிகர்களுக்கு வருத்தம் என்றாலும், கொரோனா சமயத்தை மனதில் வைத்து இந்த முடிவை படக்குழு எடுத்துள்ளனர். தற்போது வெளியாகியுள்ள இந்த ட்ரைலர் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 

Follow Us:
Download App:
  • android
  • ios