Asianet News TamilAsianet News Tamil

'சார்பட்டா பரம்பரை' படத்தின் கிராண்ட் சக்சஸ் மீட்! ஒட்டு மொத்த பிரபலங்களின் வேற லெவல் கொண்டாட்டம்!

'சார்பட்டா பரம்பரை' படத்தின், கிராண்ட் சக்சஸ் மீட்டில் இந்த படத்தின் ஒட்டு மொத்த பட குழுவினரும் கலந்து கொண்டு கொண்டாடியுள்ளனர். தற்போது இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக, ரசிகர்கள் இந்த படத்தின் வெற்றிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
 

sarpatta parambarai grand success meet celebration
Author
Chennai, First Published Aug 10, 2021, 12:49 PM IST

'சார்பட்டா பரம்பரை' படத்தின், கிராண்ட் சக்சஸ் மீட்டில் இந்த படத்தின் ஒட்டு மொத்த பட குழுவினரும் கலந்து கொண்டு கொண்டாடியுள்ளனர். தற்போது இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக, ரசிகர்கள் இந்த படத்தின் வெற்றிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழில் வெளியான விளையாட்டு தொடர்பான பல்வேறு படங்களுக்கும் மசூடம் சூட்டும் வகையில் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் ஜூன் 22 ஆம் தேதி வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான  'சார்பட்டா பரம்பரை' திரைப்படம்  அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஒரு வேலை ஓடிடியில் வெளியாகாமல் திரையரங்கில் வெளியாகி இருந்தால்... வேற லெவலுக்கு ஹிட் அடித்திருக்கும் என்பதே ரசிகர்களின் கருத்து.

sarpatta parambarai grand success meet celebration

இந்தப் படத்தில், நாயகனாக நடித்திருந்த ஆர்யா, எந்த அளவிற்கு படத்திற்காக தன்னை வருத்தி கொண்டு நடித்துள்ளார் என்பது ஒவ்வொரு பிரேமிலும் தெரிந்தது. அதே போல் துஷாரா விஜயன், கலையரசன், பசுபதி, சந்தோஷ் பிரதாப், அனுபமா குமார், ஜான் கோகென், ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்றுள்ளார். குறிப்பாக அனைவருமே அந்த படங்களின் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர் என்று சொல்லும் அளவிற்கு அசத்தியிருந்தனர்.

sarpatta parambarai grand success meet celebration

விளையாட்டு சம்பந்தமான படங்களை எடுப்பது என்பது எப்போதுமே இயக்குநர்களுக்கு மிகப்பெரிய சவாலான விஷயம். ஆனால் இயக்குநர் பா.ரஞ்சித் 1970களுக்கு பிற்பகுதியில் வடசென்னையில் பிரபலமாக இருந்த பாக்ஸிங் கலாச்சாரத்தை கண்முன் காட்டியுள்ளதாக ரசிகர்கள் சோசியல் மீடியாவில் புகழ்ந்து வந்தனர். தமிழ் மொழியை அறியாத பலரும் இந்த படம் குறித்து விமர்சனம் செய்த போது, சிறந்த படம் கண்டிப்பாக மொழிகளை கடந்து கூட ரசிகர்களை சென்றடையும் என்பதை 'சார்பட்டா பரம்பரை' புரியவைத்தது .

sarpatta parambarai grand success meet celebration

அதே போல் இந்த படத்தின் கலை இயக்குனர், தத்ரூபமாக 1970 களில் இருந்த வட சென்னை செட்டை கண் முன் நிறுத்தி இருந்தார். சந்தோஷ் நாராயணனின் இசையும் அல்டிமேட்... என புகழாதவர்கள் யாரும் இல்லை. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை படக்குழுவினர் கிராண்ட் சக்சஸ் மீட்டுடன் கொண்டாடியுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாக, ரசிகர்களும் இந்த படத்தின் வெற்றிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறாரகள்.

Follow Us:
Download App:
  • android
  • ios