Asianet News TamilAsianet News Tamil

சர்கார் தீபாவளிக்கு வருமா? சூடுபிடிக்கும் திருட்டுக்கதை பஞ்சாயத்து!

நேற்று டீஸரும் வெளியிடப்பட்டுள்ளநிலையில், தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு தயாராகிவரும் ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியின் ‘சர்கார்’ படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு வருமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Sarkar theft story
Author
Chennai, First Published Oct 20, 2018, 10:46 AM IST

நேற்று டீஸரும் வெளியிடப்பட்டுள்ளநிலையில், தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு தயாராகிவரும் ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியின் ‘சர்கார்’ படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு வருமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சன்பிக்‌ஷர்ஸ் தயாரிக்கும் #சர்கார் கதை திருடப்பட்ட கதை என்பதும், வருண் ராஜேந்திரன் என்ற உதவி இயக்குனர் செங்கோல் என்ற கதையை  எழுத்தாளர் சங்கத்தில் 2007ம் பதிவு செய்ய,அதை திருடி #சர்கார் என்ற பெயரில் எடுத்திருப்பது உறுதி ஆகியுள்ளதாம். Sarkar theft story

இது தொடர்பான பஞ்சாயத்து கடந்த சில வாரங்களாகவே திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் நடந்துவரும் நிலையில், பஞ்சாயத்துக்கு தலைமை ஏற்றுவரும் இயக்குநர் பாக்கியராஜ் ‘சர்கார்’ கதை உறுதியாக வருண் ராஜேந்திரனுடையதுதான். தொடர்ந்து கதைத்திருட்டில் ஈடுபட்டு கோடிகொடியாய் சம்பாதிக்கும் முருகதாஸுக்கு இத்தோடு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறாராம். Sarkar theft story

ஆனால் இதே பஞ்சாயத்தில் துவக்கத்திலிருந்தே ‘சர்கார்’ கோஷ்டிகளின் பக்கம் நிற்கும் ஆர்.கே.செல்வமணி பாதிக்கப்பட்டவரின் புகாரை முறையாக காதுகொடுத்துக்கூட கேட்காமல் கதாசிரியின் அடிவயிற்றில் அடிக்கிறாராம். இந்த பஞ்சாயத்தில் முருகதாஸின் பக்கம் நிற்க ஆர்.கே.செல்வமணி பெரிய கட்டிங் வாங்கிவிட்டதாகவும் ஒரு செய்தி உலாவுகிறது. Sarkar theft story

இன்னும் சில தினங்களில் தனக்குரிய நியாயம் கிட்டாவிடில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நடத்தி, அதில் ஏ.ஆர்.முருகதாஸின் முகத்தை கிழிக்க முடிவு செய்திருக்கிறார் ‘செங்கோல்’ கதாசிரியர் வருண் ராஜேந்திரன்.

Follow Us:
Download App:
  • android
  • ios