சமீப காலத்தில் எந்த சினிமா இயக்குநரும் சந்தித்திராத விமர்சனங்கலை சந்தித்துக் கொண்டிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். சர்கார் படக்கதை ‘செங்கோல்’ படத்தின் கதை என்பது நிரூபணமாகி வருண் ராஜேந்திரனின் பெயரை டைட்டிலில் போடுவதற்கு முருகதாஸ் சம்மதித்திருப்பதை கண்டு தமிழ் சினிமா உலகம் முருகதாஸை கழுவிக் கழுவி ஊற்றுகிறது. 

இந்த அசிங்கம் முருகதாஸுடன் போய்விடவில்லை, விஜய்யையும் இழுத்து வைத்து தார் பூசுகிறது. சர்கார் பட ஆல்பம் வெளியீட்டு விழாவில் இந்தப் படத்தின் கதை பற்றியும், இயக்குநர் பற்றியும் விஜய் ஓவராய் புகழ்ந்த ஒவ்வொரு வார்த்தையையும் இப்போது எடுத்து வைத்துக் கொண்டு இணைய தளங்களில் கிழி! கிழி! என கிழிக்கின்றனர் அஜித் உள்ளிட்ட மற்ற ஹீரோக்களின் ரசிகர்கள். ஆனால் கீழே விழுந்து மீசையில் ஒரு லோடு மண் ஒட்டிய பிறகும் கூட ‘என்னைப் போலவே கதை யோசித்திருக்கும் ஒரு உதவி இயக்குநரை பாராட்டும் விதமாக டைட்டிலில் பெயர் போடுகிறேன்!’ என்று முருகதாஸ் சப்பைக் கட்டு கட்டி பேசியிருப்பதை உலகம் ரசிக்கவில்லை. ‘அவர் மூஞ்சியை பார்த்தாலே வெறுப்பா இருக்குது. பத்து லோடு பொய் அவரோட மூஞ்சியில அப்பியிருக்குது. தளபதியையும் சேர்த்து அசிங்கப்படுத்திட்டார்.’ என்று கொதிக்கின்றனர் விஜய் ரசிகர்கள். 

இந்நிலையில் விஜய், புஸ்ஸி ஆனந்த், பி.டி.செல்வக்குமார் உள்ளிட்ட தன் வட்டாரத்தின் மிக மிக முக்கிய நபர்களை அழைத்து முருகதாஸ் விவகாரத்தால் தன்னுடைய இமேஜூக்கு ஏற்பட்டுள்ள டேமேஜ் பற்றி பேசியிருக்கிறார். அப்போது முருகதாஸை கடுமையாக விமர்சித்திருக்கின்றனர் சிலர். விஜய் அமைதியாக கேட்டுக் கொண்டாராம். கத்தி படக் கதையின் பஞ்சாயத்து இன்னமும் முடியாதது பற்றி சுட்டிக் காட்டிய மற்றொருவர் ‘பாவம் தளபதி அந்த அன்பு ராஜசேகர்’ என்று இரக்கம் காட்டினாராம். 

அதே நேரத்தில் எல்லோருமே, இவ்வளவு நடந்த பிறகும் இன்னும் முருகதாஸ் ஓவர் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டு சீன் போடுவதாக கொதித்திருக்கின்றனர். அப்போது விஜய் வட்டாரத்தின் முக்கிய புள்ளி ஒருவர் ‘பேசாம அவருக்கு லைவ் டிடெக்டர் சோதனை நடத்தி, எங்கெங்கே இருந்து என்னென்ன கதைகளை சுருட்டினார்ன்னு கண்டுபிடிக்கணும். இனிமே அவர் படத்துல நடிக்கிறதுக்கு முன்னாடியும் அவருக்கு லைவ் டிடெக்டர் சோதனை நடத்தி, அந்தக் கதை யாரோடதுன்னு தெரிஞ்சுகிட்டுதான் முடிவு பண்ணனும்.” என்று சொல்லி வெறுப்பாய் சிரிக்க, தலையிலடித்துக் கொண்டு எழுந்தாராம் விஜய்.