இன்னும் சில நிமிடங்களில் ‘சர்கார்’ கதைத்திருட்டு தொடர்பான தீர்ப்பு கோர்ட்டில் அறிவிக்கப்பட இருந்த நிலையில், ஒரிஜினல் கதாசிரியருடன் தாங்கள் சமரசத்துக்கு வந்துவிட்டதாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸும், படத்தயாரிப்பாளர்கள் சன் பிக்‌ஷர்ஸும் தெரிவித்துள்ளனர். இதனால் கோர்ட் தீர்ப்பு இரண்டு மணிநேரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர் முன்னிலையில் ‘சர்கார்’ கதைத்திருட்டு தொடர்பான விசாரணை நடந்துவருகிறது.  இன்று தீர்ப்பு அறிவிக்கப்படுவதாக இருந்த இந்த விசாரணைக்கு இயக்குநர் முருகதாஸ் சன் பிக்‌ஷர்ஸ் தயாரிப்பாளர்களும் ஆஜராகியுள்ளனர். வழக்கில் பாதிக்கப்பட்ட உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரனின் ஆதரவாளர் இயக்குநர் பாக்கியராஜும்  கோர்ட்டுக்கு வந்திருக்கிறார்.

நீதிபதி முன்னிலையில் ஆஜரான ஏ.ஆர்.முருகதாஸ், தங்கள் மீது வழக்கு தொடுத்துள்ள உதவி இயக்குநருடன் தாங்கள் சமரசம் செய்துகொள்ள முடிவெடுத்துருப்பதாகவும், எனவே கோர்ட்டுக்கு வெளியே தாங்கள் இப்பிரச்சினையை முடித்துக்கொள்ள அனுமதிக்கும்படியும் வேண்டுகோள் வைத்தார்.

 

அதையொட்டி நீதிபதி சுந்தர், வருண் ராஜேந்திரன் தரப்பை அறிந்துகொள்ள வழக்கை இரண்டுமணிநேரத்துக்கு ஒத்திவைத்தார். கதைத்திருட்டை முருகதாஸ் ஒப்புக்கொண்டிருப்பதால் கோடம்பாக்கமே உற்சாகக்கொண்டாட்டத்தில்