Asianet News TamilAsianet News Tamil

திருட்டு சர்கார் முழுமையா உதவமுடியாமைக்கு வருந்துகிறோமாம்... அப்புறம் என்ன.... துக்கு சங்கம்? கொந்தளிக்கும் இயக்குநர்கள்

சர்கார் கதைத்திருட்டு தொடர்பாக வெளியாகியுள்ள தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் லெட்டர் பேடு மிகப்பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

Sarkar Story Theft...Angry directors
Author
Chennai, First Published Oct 26, 2018, 12:18 PM IST

’சர்கார்’ கதைத்திருட்டு தொடர்பாக வெளியாகியுள்ள தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் லெட்டர் பேடு மிகப்பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. பொதுச்செயலாளர் மனோஜ்குமார், தலைவர் கே.பாக்கியராஜ் ஆகியோரின் கையெழுத்துகளுடன் வெளியான அக்கடிதத்தின் கடைசி பக்கம் மட்டும்  வலைதளங்களில் படுவேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. Sarkar Story Theft...Angry directors

அக்கடித்தத்தின் சாராம்சம் இதுதான்...ஒரு சிலரின் கருத்து வேறுபட்டிருந்தாலும் பெரும்பாலான உறுப்பினர்களின் கருத்துகளின் அடிப்படையில் வருண் ராஜேந்திரனின் ‘செங்கோல்’ கதையும் ஏ.ஆர்.முருகதாஸின் ‘சர்கார்’ கதையும் ஒன்றே என்று சங்கம் முடிவு செய்கிறது.

உங்கள் பக்க நியாயத்துக்காக நீங்கள் [வருண் ராஜேந்திரன்] அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதை நாங்கள் தடைசெய்ய மாட்டோம். முழுமையாக தங்களுக்கு உதவமுடியாமைக்கு வருந்துகிறோம்’ என்று முடிகிறது அந்தக்கடிதம். Sarkar Story Theft...Angry directors

இக்கடிதத்தை படிக்கநேரும் அனைவரும் நியாயமான உதவி இயக்குநர்களுக்கு உதவ முடியாமைக்கு வருந்துகிறோம்னு சொல்றதுக்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அப்புறம் என்ன டேஷ்க்கு சங்கம்?? என்று கொதித்துப்போய் கமெண்ட் போடுகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios