சர்கார் ஆடியோ வெளியீட்டுவிழாவில் ‘நான் முதல்வரானால்... என்று பேசி அதற்கான பலன்களை அடைந்து விஜய் சற்று அமைதிகாத்தாலும் அவரது ரசிகர்கள் அவரை அவ்வளவு லேசில் விடுவதாயில்லை. 

சில தினங்களுக்கு முன் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரண்டையும் ஒழித்து ‘சர்கார்’ ஆட்சி மலரப்போகிறது என்ற அறிவிப்புடன் மதுரையைக் கலக்கிய போஸ்டர்களைத் தொடர்ந்து, நேற்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் புதிய சர்கார் போஸ்டர் புரட்டிப்போட வந்திருக்கிறது.

அப்போஸ்டரில் இதுவரை தமிழகத்தை ஆண்ட முதல்வர்கள் முதல் தற்போது ஆண்டுகொண்டிருக்கும் எடப்பாடியாரின் புகைப்படங்கள் வரை இடம்பெற்றிருக்கின்றன. அவர்களுக்கு அருகில் அன்னார் விஜயின் புரட்சி  ஒரு விரல். அடுத்து அவரது படம் இடம்பெற்றிருக்கிறது. அதாவது எடப்பாடியாருக்கு அடுத்த முதல்வர் விஜயேதானாம்.  

‘ஸ்பெஷல் ஷோவுக்கு பெர்மிஷன் வாங்குறதுக்கே எவ்வளவு முக்கு முக்குனாய்ங்க. இதுல அடுத்த முதல்வரா?? அடங்குங்கண்ணா..