Asianet News TamilAsianet News Tamil

ஸ்டார்ட் மியூசிக்... சர்கார் பிரச்சினையில் மீண்டும் அமைச்சர்களை வம்பிழுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்...!

பஞ்சாயத்து முடிஞ்சி போச்சி. போங்க. வீட்டுல போய் புள்ளகுட்டிகள படிக்க வைக்கிற வழியப் பாருங்க’ என்று தமிழக முதல்வரும் மற்ற அமைச்சர்களும் கூட ‘சர்கார்’ பிரச்சினையை ஒரு ஓரமாகப் போட்டுவிட்டு அடுத்த வேலைகளைப் பார்க்கக் கிளம்பிய நிலையில், ‘உங்கள அவ்வளவு லேசுல விட முடியாது பாஸ். வாங்க இன்னும் கொஞ்சம் விளையாடலாம்’ என்று வம்புக்கு இழுக்கின்றனர் சர்கார் பார்ட்டிகள்.

Sarkar movie team celebrate the get together
Author
Chennai, First Published Nov 12, 2018, 10:02 AM IST

பஞ்சாயத்து முடிஞ்சி போச்சி. போங்க. வீட்டுல போய் புள்ளகுட்டிகள படிக்க வைக்கிற வழியப் பாருங்க’ என்று தமிழக முதல்வரும் மற்ற அமைச்சர்களும் கூட ‘சர்கார்’ பிரச்சினையை ஒரு ஓரமாகப் போட்டுவிட்டு அடுத்த வேலைகளைப் பார்க்கக் கிளம்பிய நிலையில், ‘உங்கள அவ்வளவு லேசுல விட முடியாது பாஸ். வாங்க இன்னும் கொஞ்சம் விளையாடலாம்’ என்று வம்புக்கு இழுக்கின்றனர் சர்கார் பார்ட்டிகள். Sarkar movie team celebrate the get together

சர்கார் முதல் வார வெற்றியை ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடும் எண்ணத்தில் நேற்று இயக்குநர் முருகதாஸ், நடிகர் விஜய், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்,நடிகைகள் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி ஆகியோர் ஒரு இடத்தில் சந்தித்திருக்கின்றனர். அந்த சந்திப்பு ஒரு பார்ட்டியின் நிமித்தம் என்பது தெரிகிறது.

 Sarkar movie team celebrate the get together

பார்ட்டி துவங்கும் முன்பாக ஒரு கேக் வெட்டப்படுகிறது. வில்லங்கமே அந்த கேக்கில்தான் இருக்கிறது.  அந்த கேக்கைச் சுற்றி  நான்கு பக்கத்திலும் இரண்டு மிக்ஸி மற்றும் இரண்டு கிரண்டர்கள் நக்கலாக வைக்கப்பட்டிருந்தன. அந்த கேக்கை வெட்டுவதற்கு முன் பயங்கர பில்டப்கள். வெறும் கை மட்டும் காட்டி ஒரு ஸ்டில். அந்தக் கை யாரோடது? என்று கேள்வி.  உடனே ...ஹேய்ய்ய்ய்ய்.... தளபதி விஜயோடது’... என்று ஆரவாரமான பதில்கள். இப்படி நடந்து முடிந்தது அந்தப்பார்ட்டி. Sarkar movie team celebrate the get together

இலவச மிக்ஸி, கிரைண்டர் பஞ்சாயத்து பெரிய அளவில் நடந்து முடிந்திருக்கும் வேளையில் சம்பந்தப்பட்ட அ.தி.மு.க.வினர் அத்தனை பேரையும் நக்கலடிக்கும் இப்படங்கள் சமூக வலைதளங்களில் வந்தால் அது என்னமாதிரியான சர்ச்சைகளை உண்டாக்கும் என்பது கூட தெரியாத பச்சப்புள்ளயாக இந்த பார்ட்டியின் புகைப்படங்களை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்தார் ஏ.ஆர்.ரகுமான். டியர் மினிஸ்டர்ஸ் கம் ஆன். ...ஸ்டார் மியூசிக்.

Follow Us:
Download App:
  • android
  • ios