இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி, கத்தி, படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக நடித்து வரும் திரைப்படம் 'சர்கார்'. இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையில், கடந்த வாரம் இறுதியாக மிச்சம் இருந்த விஜயின் ஓப்பெனிங் பாடல் மற்றும் சண்டை காட்சிக்காக அமெரிக்கா சென்று திரும்பினர் படக்குழுவினர்.

விஜய் சென்னை வந்து இறங்கியதும் முதல் வேலையாக, மறைந்த முதலமைச்சர் திமுக. தலைவர் கருணாநிதியின் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில், இந்த படத்தில் வரும் விஜயின் ஓப்பனிங் பாடலை அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 5 நாட்களாக படக்குழுவினர் படமாக்கி வந்தனர். இந்த படத்திற்கு நடன இயக்குனர் ஷோபி நடனம் அமைத்திருந்தார்.

இந்த பாடலின் படப்பிடிப்பு முடிந்ததுமே அமெரிக்கா சென்றிருந்த அனைவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர். தற்போது அமெரிக்காவில் படமாக்கப்பட்ட பாடலை யாரோ மர்ம நபர் செல் போனில் படம் பிடித்து வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் விஜய் மற்றும் நடன குழுவினர் ஆடும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதனால் சர்கார் படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மேலும் நடிகர் இந்த சம்பவத்தால் சற்று கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.