தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'சர்கார்'. இந்த திரைப்படத்தில் அரசு வழங்கும் இலவச பொருட்கள் குறித்து சர்ச்சைக்குரிய காட்சி இருந்ததாக கூறி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை விரைவில் வரவுள்ள நிலையில் இன்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் இருந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில்... 'சர்கார்' பட விவகாரத்தில் தன் மீது பதியப்பட்டுள்ள  3  வழக்கை ரத்து செய்யக்கோரி ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். 

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய கூடாது என்றும், அவர் மீதான எஃப்.ஐ.ஆர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு  அறிவுறுத்தியுள்ளது.