தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியான சர்கார் படம், சர்ச்சைகளை தாண்டி டாப் கியரில் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வந்தாலும். திடீர் திடீர் என சடன் பிரேக் போடா வைக்கிறது சிறு சிறு பிரச்சனைகள். 

ஏற்கனவே படத்தின் வெற்றியை உறுதி படுத்த சக்ஸஸ் பார்ட்டி வைத்து ஜாமாய்த்த படக்குழுவினர். இப்போது மேலும் ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளனர். அதுவும் விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருக்கும் கேரளாவில்.

ஆம்... சர்கார் பட போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவிலும் தற்போது  வழக்கு பதியப்பட்டுள்ளது. 

ஏற்கனவே படத்தில் இடம்பெற்றிருக்கும் சில சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என அதிமுகவினர் பல ஆர்பாட்டம், பேனர் கிழிப்புகளில் ஈடுபட்ட நிலையில் இது சர்கார் படக்குழுவிக்கு மேலும் தலைவலியை கொடுத்துள்ளது.

கேரளாவில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா மாநிலம் திருச்சூரில் சுகாதாரத் துறையின் புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில், சர்கார் திரைப்பட விநியோக நிறுவனமான கோட்டயம் சயூஜியம் சினி ரிலீஸ், சன் பிக்சர்ஸ், திருச்சூர் ராம்தாஸ் திரையரங்க உரிமையாளர் ஆகியோர் அடுத்தடுத்து சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.