விஜய் நடிப்பில், இயக்குனர் முருகதாஸ் இயக்கிய சர்கார் திரைப்படம், விஜய் ரசிகர்கர்களின் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 6 ஆம் தேதி, தீபாவளி தினம் அன்று வெளியானது. 

திரைப்படம் வெளியாகும் முன்பே வருண் என்பவரால் இது திருட்டுக்கதை என்கிற சர்ச்சையில் சிக்கி, பின் ஒரு வழியாக இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து தற்போது 'சர்கார்' படத்தில் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியை மிகவும் மோசமாகி இயக்குனர் விமர்சித்துள்ளதாக, தமிழகம் முழுவதும் பிரச்சனை உருவெடுத்தது. 

இதன் காரணமாக அந்த கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மற்றும் ஏம்.எல்.ஏ க்களே போராட்டத்தில் குறித்து, சர்கார் திரைப்படத்தை திரையிடக்கூடாது என கூறினார். இதனால் தற்போது சர்கார் படத்தில் இருந்து நான்கு காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவோ என்னவோ இரண்டு இடங்களில்  விஜய் சர்கார் படத்தின் வசூல் அடிமட்டத்தில் உள்ளது கூறப்படுகிறது. 

இது குறித்து தற்போது  வெளியாகியுள்ள தகவலில், கேரளா மற்றும் அமெரிக்காவில் கடும் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளதாம். கேரளாவில் இப்போது வரை ரூ. 9 கோடி தான் வசூல் வந்துள்ளதாம். அங்கு ரூ. 25 கோடி வரை வசூல் செய்தாலே நல்ல லாபத்தை பெரும், அமெரிக்காவில் 6 லட்சம் டாலர் வசூல் வர இன்னும் 7 லட்சம் டாலர் வசூல் வந்தாலே லாபம் என கூறுகின்றனர் சர்கார் பட குழுவினர்.