புதிதாக திரைப்படம் எடுக்கும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் யாருக்கு பயப்பிடுகிறார்களோ இல்லையோ... தமிழ் ராக்கர்ஸ் ஊடகத்தின் மீது எப்போதுமே பயம் இருந்து கொண்டு தான் இருக்கும். 

திரைப்படம் சுமாராக இருந்தால், ஊடகத்திலேயே அந்த படத்தை பார்த்து விட்டு, சிலர் திரையரங்கம் செல்வதில்லை. ஆனால் பலர் படத்திற்கு நல்ல விமர்சனம் வெளிவந்தால், அந்த படத்தை திரையரங்கம் சென்று பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில், தீபாவளி தினத்தை முன்னிட்டு... நாளை மிக பிரமாண்டமாக வெளியாக உள்ள திரைப்படம் 'சர்கார்'. இந்த படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு படத்தின் டிக்கெட்டை வாங்கி வருகிறார்கள். விஜய் ரசிகர்களின் ஆர்வத்தை சிலர் பயன் படுத்தி கொண்டு, ப்ளாக்கில் 2000  முதல் 5000 வரை ஒரு டிக்கெட்டை விற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் இன்று காலை தமிழ் ராக்கர்ஸ், அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில், சர்கார் படத்தின் HD பாதிப்பை வெளியிடுவோம் என சவால் விடுவது போல் கூறியுள்ளது. தமிழ் ராக்கர்ஸின் இந்த ட்விட்டை பார்த்து விஜய் ரசிகர்கள் பலர், வேண்டாம் என கூறி வருகிறார்கள். ஆனால் யார் என்னசொல்லலும் தமிழ் ராக்கர்ஸ் சொல்வதை செய்யும் என்றும் சிலர் கூறி வருகிறார்கள். என்ன நடக்க்கிறது என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.  இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.