சர்கார் கதை திருட்டு விவகாரத்தால் படம் மீதான எதிர்பார்ப்பு குறைந்துவிட்டதாக விநியோகஸ்தர்கள் தயங்குவதால் வந்த விலைக்கு படத்தை சன் பிக்சர்ஸ் விற்பனை செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியானது. 

விஜய் – முருகதாஸ் – ஏ.ஆர்.ரஹ்மான் – சன் பிக்சர்ஸ் என மெகா கோம்போவில் உருவான சர்கார் படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. இதனை பயன்படுத்தி தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்கள், பிற நாடுகளுக்கான விநியோக உரிமையை கடந்த மாதமே சன் பிக்சர்ஸ் விற்றுத் தீர்த்துவிட்டது. தமிழகத்தில் மட்டும் மேலும் எதிர்பார்ப்பை எகிற வைத்து பிசினஸை கடைசி நேரத்தில் அதிகமாக்கலாம் என்று சன் பிக்சர்ஸ் திட்டமிட்டிருந்தது.

 

ஆனால் சர்கார் படத்தின் கதை திருடப்பட்டது தான் என்கிற தகவல் அந்த படத்தின் மீதான இமேஜை செம்மையாக டேமேஜ் செய்தது. மேலும் சர்கார் படத்தின் கதையையும் இயக்குனர் பாக்யராஜ் முழுமையாக கூறிவிட்டார். அந்த கதையை கேட்டவிநியோகஸ்தர்கள் பலரும் இது தான் கதையா? என்று முகத்தை திருப்பிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. இதனால் ஏற்கனவே பேசிய தொகைக்கு கூட சர்காரை வாங்க விநியோகஸ்தர்கள் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.    
இதனால் வேறு வழியே இல்லாமல் சர்கார் படத்தை விநியோகஸ்தர்கள் சிலருக்கு போட்டுக்காட்டும் நிலைக்கு சன் பிக்சர்ஸ் தள்ளப்ப்டடதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதன் பிறகும் கூட விநியோகஸ்தர்கள் படத்தில் மசாலா ஐடம் ரொம்பு குறைவு நீங்கள் கேட்கும் தொகையை கொடுக்க முடியாது என்று பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடியுள்ளனர். இதனால் கடைசி நேரத்தில் சர்கார் படத்தின் தமிழக ஏரியா தியரிட்டிக்கல் ரைட்சை வந்த விலைக்கு சன் பிக்சர்ஸ் தள்ளிவிட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு விஜய் படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங்கும் டல்லடித்துள்ளதாக தியேட்டர் வட்டாரங்களில் தகவல் வெளியாகி வருகிறது. விஜய் ரசிகர்கள் மட்டுமே ஆர்வத்துடன் வந்து டிக்கெட்டுகளை வாங்குவதாகவும், அதிலும் மெர்சல், தெறிக்கு வந்ததை போன்று கட்டுக்கடங்காத கூட்டத்தை அட்வான்ஸ் புக்கிங் சென்டர்களில் பார்க்க முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது.