தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய், அஜித், ரஜினி, என சில முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியானால்... கண்டிப்பாக பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என விதிக்கப்படாத வரையறை ஒன்றை உருவாக்கி வைத்துள்ளனர் ரசிகர்கள். இதனால் 24 மணி நேரத்தில் 100 கோடி வசூல் சாதனை செய்து விட்டது என  தங்களுக்கு தோன்றியவற்றையெல்லாம் சமூக வலைத்தளத்தில்  பறக்க விடுவார்கள். ஆனால் இப்படி வெளியாகும் தகவல்கள் உண்மையானதாக இருப்பதில்லை. 

அந்த வகையில் கடந்த தீபாவளி தினம் அன்று விஜய் நடித்து வெளியான திரைப்படம் 'சர்கார்'. இந்த திரைப்படம் வெளியான பின்பு பல பிரச்சனைகளை சந்தித்தாலும் தற்போது வரை பல திரையரங்கங்களில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த திரைப்படம் குறித்து ஒரு தரப்பினர் 200 கோடி வசூல் சாதனை செய்து விட்டது என கூறப்பட்டாலும்... மற்றொரு தரப்பினர் சர்கார் திரைப்படம் போட்ட லாபத்தை கூட ஈட்டவில்லை என கூறிவருகிறார்கள். அதிலும் சென்னையில் வசூல் குறைவு என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள பிரபல விநியோகஸ்த்தர் அபிராமி ரமதான்... விஜய்யின் சர்கார் படம் சென்னையில் போட்ட பணத்தை எடுத்து விட்டதாக கூறியுள்ளார். இதன் மூலம் சென்னையில் 'சர்கார்'  நஷ்டமடைய வில்லை தெரிகிறது. மேலும் 'சர்கார்' பற்றி பரவி வரும் தகவல்கள் எல்லாம் பொய் இப்படி பட்ட தகவல்களை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.