சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேச துரோக சட்டப்பிரிவில் நடவடிக்கை எடுக்க கோரியும் அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. முருகதாஸ் மாநில அரசுக்கு எதிராக வன்முறை செய்ய தூண்டும் வகையில் படம் எடுத்துள்ளார் என தேவராஜ் மேலும் தன்னுடைய புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தீபாவளிக்கு முன்பே 'சர்கார்' படத்திற்கு சில பிரச்சனைகள் வந்தாலும், படத்தின் ரிலீசுக்கு பின்பு கூடுதலாக பிரச்சனை பற்றி கொண்டது. அரசியல் தலைவர்களை மையமாக வைத்து சில கதாப்பாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அந்த காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்றும் சில அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும், தொண்டர்கள் போர் கொடி தூக்கியுள்ளனர். 

இந்நிலையில் சென்னை பெரம்பூரை சேர்ந்த தேவராஜ் என்பவர் சர்க்கார் திரைப்படத்தை கூடுதல் காட்சிகள் திரையிட்டு, அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை கோரியும், இந்த படத்தின் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ஒரு தேச துரோகி என்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், முருகதாஸ் இயக்ககத்தில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சர்கார்' . இந்த திரைப்படம் தீபாவளி தினமான 6-ஆம் தேதி வெளியானது. ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டு வந்த நிலையில்... தற்போது முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. இப்படி முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் மீது அதிக தொகை வைத்து டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தேவராஜ் என்பவர் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். 

இந்த மனுவில் "சென்னையில் உள்ள 32 திரையரங்குகள், தீபாவளியையொட்டி விதிகளை மீறி சர்கார் திரைப்படத்தை 6 காட்சிகள் திரையிட உள்ளதாகவும். அதற்கு வசதியாக திட்டமிடப்பட்டு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், டிக்கெட்டின் விலையும் அரசு நிர்ணயித்திருப்பதைவிட கூடுதலாக 500 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனவே, விதிகளை மீறி செயல்படும் திரையரங்குகள் மீது நடவடிக்கை வேண்டும் என கூறியுள்ளார். சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேச துரோக சட்டப்பிரிவில் நடவடிக்கை எடுக்க கோரியும் அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. முருகதாஸ் மாநில அரசுக்கு எதிராக வன்முறை செய்ய தூண்டும் வகையில் படம் எடுத்துள்ளார் என தேவராஜ் மேலும் தன்னுடைய புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.