2019 ஆரம்பமே தமிழ் சினிமாவிற்கு ஒரு அசத்தலான சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. அதுவும் ஒரே நேரத்தில் தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்திகளான அஜித்-ரஜினி படங்கள்  வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பேட்ட படம் கலவையான விமர்சனமாக இருந்தாலும் அஜித் படத்துக்கு ஈடு கொடுத்து ஓடுகிறது.

பொங்கலுக்கு ரிலீஸ் ஆன இந்த இரண்டு படங்களில் பேட்ட படத்தைவிட விஸ்வாசம் வசூல் ரீதியாக சக்கைப்போடு போடுகிறது. அஜித் ரசிகர்களின் கொண்டாட்டத்தின் உச்சத்தில் உள்ளனர். எந்த திரையரங்கில் எடுத்துக் கொண்டாலும் "விஸ்வாசம்" படம் முந்தைய படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்துவிட்டது என்று தான் கூறுகிறார்கள்.

பிரபல திரையரங்க நிறுவனமான ராம் முத்துராம் சினிமாஸ் நிறுவனம் அதிரடியான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த போஸ்டரில் ஹைலைட் கிராசர் என்ற சிறப்பை பெற்றிருந்தாக குறிப்பிட்டுள்ளது. மேலும், சென்னை தாம்பரத்தில் உள்ள வித்யா தியேட்டரில் இதுவரை 35 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுள்ளதாம். அதிலும் முந்தய படங்களின் பாக்ஸ் ஆஃபிஸ் சாதனைகளையும் முறியடித்து விட்டதாம். இன்னும் வரப்போகும் நாட்களில் புதிய சாதனைகளை நிகழ்த்தும் என சொல்லப்படுகிறது.

Scroll to load tweet…

இந்த லிஸ்டில் இப்போது, Sj cinemasசிலும் சோலோவாக ரிலீஸ் ஆன சர்கார், 2.0 படங்களில் மொத்த வசூல் சாதனைகளை வெறும் 17 நாட்களில் முறியடித்து முதலில் உள்ளதாம் "விஸ்வாசம்". இதை இந்த திரையரங்க உரிமையாளர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.