16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4வது நாளான இன்று என்ன நடக்கப் போகிறதோ? என்ற எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில் இது குறித்த மூன்று பிரமோக்கள் தற்போது வெளியாகியுள்ளது. சற்று முன் வெளியான மூன்றாவது புரோமோவில் பருத்திவீரன் சரவணன், அவருடைய வாழ்க்கையில் நடந்த சோகமான சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில், "அவருக்கு குழந்தை இல்லை என்றும்... ஆதலால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும், புடவை தாலி என அனைத்தும் முதல் மனைவியே வாங்கி கொடுத்தார்.. குழந்தைக்காக தான் இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறேன் என அவளிடம் சொல்லிட்டேன்.. அவளும் ஓகே சொல்லிட்டார். எந்த பெண்ணும் விட்டுக்கொடுக்காத ஒன்றை என் மனைவி விட்டுக்கொடுத்தாங்க என சொல்லி அழும் ப்ரோமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.