சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடித்து வரும் படத்தில் இன்னொரு நாயகியாக முன்னணி தமிழ் நடிகை கமிட்டாகியுள்ளார்.

தமிழகத்தில் புகழ் பெற்ற கடை நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடிகைகளுடன் விளம்பர படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் பாடல்கள் பிரம்மாண்ட செட் போட்டு எடுக்கப்பட்டு இருந்ததாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஏற்கனவே ஒரு அறிமுக நடிகை அண்ணாச்சிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இன்னொரு நடிகை தேவைப்பட்டதால் படக்குழு முன்னணி தமிழ் நடிகை ஒருவரை அணுகியுள்ளனர். அவரும் தற்போது கையில் படங்கள் ஏதும் இல்லாததால் நடிக்க ஓ.கே சொல்லி ஒப்பந்தமாகியுள்ளார். என்னது முன்னணி தமிழ் நடிகையா? யாருப்பா அது என்று தானே யோசிக்கிறீங்க.. அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த தமன்னா தான் அந்த நடிகை என கூறப்படுகிறது.

இவர் ஏற்கனவே அண்ணாச்சியுடன் சேர்ந்து விளம்பர படத்தில் நடித்திருந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது இந்த படத்தில் நடித்ததற்காக தமனாவிற்கு மிக பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமன்னா ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆட்டம் போட்டு கிளம்பி விடுவார் எனக் கூறப்படுகிறது.