லெஜெண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணா நடிக்கும் படத்தில் சரவணா, கீர்த்திகா திவாரி நடிக்கும் ரொமேண்டிக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இணையத்தில் கசிந்த சரவணா - கீர்த்திகா திவாரியின் ரொமேண்டிக் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. 

இந்த நிலையில் மற்றொரு தகவலும் இணையத்தில் வைரலாகி வருகிறது. நயன்தாரா ஜோடிபோட மறுத்து விட்ட சோகத்தையும் பாக்கெட்டில் போட்டு மறைத்துக் கொண்டாலும் மற்றொரு விஷயத்தில் ரொம்பவே ஹேப்பி அண்ணாச்சி... பிறகு சும்மாவா? நான்கைந்து படங்களில் நடித்து புகழ்பெற்ற பிறகே சினிமாவில் தளபதி, தல, ஸ்டார், நாயகன் என தங்களது பெயருக்கு முன்னால் பட்டத்தை  சூட்டிக் கொள்வார்கள். அல்லது ரசிகர்கள் சூட்டுவார்கள். ஆனால், அருள் அண்ணாச்சி ஏற்கெனவே விளம்பரப்படங்களில் நடித்து புகழ்பெற்று விட்டதால், ரசிகர்கள் அதிகம். அவர்கள் அருள் அண்ணாச்சிக்கு பட்டத்தை இப்போதே சூட்டி விட்டார்கள்.

அதாவது பவர் புல் ஸ்டார் சரவண அருள் என்கிற பட்டத்தை சூட்டி இருந்தார்கள். பவர் ஸ்டார் சீனிவாசனை இந்தப்பட்டம் ஞாபகப்படுத்துகிறது. இருந்தாலும் அண்ணாச்சியின் ரசிகர்கள் பவர் ஃபுல்லாக இருப்பதால் அவருக்கு இந்த பட்டம் கனகச்சிதமாகவே இருக்கும் என நினைத்தார்கள். ஆனால் அது அண்ணாச்சி மனதில் நெருடலை ஏற்படுத்தவே இப்போது யுனிவர்சல் ஸ்டார் என்கிற பட்டத்தை சூட்டி கொண்டாடி மகிழ்கிறார்கள்.