saravana store owner about acing for nayanthara
சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில், தமன்னா, ஹன்ஷிகா, ஷ்ரேயா போன்றவர்களுடன் நடித்த அதன் உரிமையாளர் சரவணன், நயன்தாரா வுடன் ஜோடி சேர்ந்து சினிமாவில் நடிப்பதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என்று கூறியுள்ளார்.
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன், சினிமாவில் ஹீரோவாக நடிப்பதாகவும், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாகவும் இணைய தளங்களில் செய்திகள் வெளியாயின.
அதில், துளியில் உண்மை இல்லை, அவருக்கு சினிமாவில் நடிப்பதில் எல்லாம் ஆர்வம் இல்லை என்று, சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் அவர் நடித்ததை வைத்தே, சமூக வலைத்தளங்களில் கலாய்த்து எண்ணற்ற மீம்ஸ்கள் வெளிவந்தன.
இந்நிலையில், அவர் சினிமாவில் நடிக்கப்போவதாக வெளியான தகவலின் அடிப்படையிலும் எண்ணற்ற மீம்ஸ்கள் வரிசை கட்ட ஆரம்பித்தன.
இதையடுத்து, சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகத்தின் சார்பில், அவர் சினிமாவில் நடிப்பதாக வெளியான தகவல் வதந்தி என்று மறுப்பு வெளியாகி உள்ளது.
