2017 டிசம்பர் மாதம் தனிக்கட்சி துவங்குவதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், ஆன்மீக அரசியல் செய்யப்போவதகவு, தனது கட்சியின் கொள்கை ‘உண்மை, உழைப்பு, உயர்வு’’என்றும் அறிவித்தார். காலம் காலமாக சரவணா ஸ்லோகன் இதுதான். இதை அப்படியே தனது கொள்கை எனக்கூறினார் ரஜினி. 

அடுத்த சில வாரங்களில் 2018 ஜனவரியில் மலேசியாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடிகர் ரஜினிகாந்த். இந்நிலையில் அங்கு நடைபெற்ற மற்றொரு விழாவில் ரஜினியை சந்தித்துப் பேசினார் சரவணா ஸ்டோர் உரிமையார் அருள் அண்ணாச்சி. மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவின் ஒரு பகுதியான நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் அறிமுக விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ரஜினியும், சரவணா ஸ்டோர் அருள் ஆகிய இருவரும் கோப்பையை அறிமுகம் செய்தனர்.

அப்போது, தனது கடை விளம்பரத்தில் நடிக்க வேண்டும். 3 நிமிட விளம்பரத்திற்கு 30 கோடி தருவதாக அருள் அண்ணாச்சி கொடுத்த ஆஃபரை ரஜினி மறுத்து விட்டார் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் கட்சி ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த் அடுத்தடுத்த படங்களிலும் கமிட் ஆகி வருகிறார். 

 

இப்போது பழைய சம்பவத்தை சுடிக்காட்டி, '’போன வருஷம் கூட சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் நடிக்கறதுக்கு 3 நிமிஷ விளம்பரத்துக்கு 30 கோடி தருவதாக சொன்ன அருள் அண்ணாச்சியிடம் சிரித்துக் கொண்டே வேண்டாம் எனச் சொல்லி விட்டார் ரஜினி. கட்சி ஆரம்பிக்க உள்நாடு, வெளிநாடுகளில் இருந்தெல்லாம் அவருக்கு பணம் தர தயாராக இருக்கிறார்கள். ஆனால், வாங்க மாட்டார். இப்போது அவர் கஷ்டப்பட்டு படங்களில் நடிக்கிறதும் கட்சி ஆரம்பிக்கத்தான்’’என சமூகவலைதளங்களில் விளக்கமளித்து வருகின்றனர்.