தமிழகத்தில் பல மாற்றங்க அதிரடியாக நடந்து கொண்டிருக்கிறது. தற்போது பல எம்.எல்.ஏக்கள் தானாக முன்வந்தது தங்களுடைய ஆதரவை முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு கொடுத்து வருகின்றனர்.
இதன் மூலம் அடுத்து ஆட்சி அமைக்கும் வைகையில் வெற்றி பாதையை நோக்கி வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறார் ஓபிஎஸ் என்று கூறப்படுகிறது.
மேலும் இன்று இரவுக்குள் அவருக்கு ஆட்சி அமைக்க தேவையான எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை கிடைத்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அதிமுகவினர் மட்டுமின்றி மற்ற கட்சியின் தலைவர்களும் முதல்வர் ஓபிஎஸ்க்கு ஆதரவாக தங்களுடைய கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், முன்னாள் நடிகர் சங்க தலைவருமான நடிகர் சரத்குமார் முதல்வருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்
மேலும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று சரத்குமார் கூறியுள்ளார்
