நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், தற்போது அரசியலில் நிலவி வரும் மாற்றங்கள் வேதனை அளிப்பதாக கூறி தனது முகநூல் பக்கத்தில் அவருடைய கருத்தை பதிவு செய்துள்ளார்...
அதில் அவர் கூறுகையில் தமிழகத்தின் பேரியக்கம், இந்திய அரசியல் களத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் அஇஅதிமுகவின் தற்போதைய நிலை வேதனையளிக்கிறது.
புரட்சித்தலைவரும் புரட்சித்தலைவியும் கட்டிக்காத்த பேரியிக்கம் பிளவு படாமல் இருப்பதற்கு எடுத்த நடவடிக்கைகளை எனது முந்தைய அறிக்கையில் பாராட்டி இருந்தேன். முக்கியமாக திரு பன்னீர்செல்வம் அவர்களே முன்மொழிந்திருக்கிறார் எனவும் குறிப்பிட்டு இருந்தேன்.
தான் பொறுப்பேற்ற முதல்நாள் முதல் சிறப்பாக செயல்பட்ட திரு பன்னீர்செல்வம் அவர்கள் கட்டாயப்படுத்தப் பட்டேன் என்று கூறியிருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது அவரின் உண்மைக்கும் உழைப்பிற்கு மதிப்பளித்து அவரின் எண்ணங்களுக்கு வழிவகுத்து, ஒன்றுபட்டு புரட்சித்தலைவி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீண்டும் சிறப்பான முறையில் நிறைவேற்றுவதற்கான அனைத்து செயல்களையும் உடனடியாக செய்யவேண்டும்.
