இயக்குனர் பாரதி ராஜாவால், கிழக்கே போகும் ரயிலில் தன்னுடைய 15 வயதில் திரையுலகை சுற்றி பார்க்க புறப்பட்ட பாஞ்சாலி, பல படங்களில், விதவிதமான கதாப்பாத்திரத்தில் நடித்தும், சற்றும் ஓய்வில்லாமல் இன்னும் தொடர்ந்து பயணித்து கொண்டு தான் இருக்கிறாள் ராதிகாவாக...

57 வயது பிறந்தநாளை கொண்டாடும்... ராதிகா திரையுலகில் 42 வருட திரைப்பயணத்தை முடித்துவிட்டார். எனினும் சீரியலில் இவருடைய கதாநாயகி ரோல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இன்று தன்னுடைய 57 ஆவது பிறந்தநாளை, கொண்டாடும் இவருக்கு பலர் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்தை தெரிவித்து வரும் நிலையில், ராதிகாவின் அன்பு கணவர் சரத்குமார்... மனதை உருக வைக்கும் அன்பு வார்த்தைகளால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்... "“இந்த சிறப்பு நாளில் சொர்க்கத்திலிருந்து சிறந்த ஆசீர்வாதங்கள் உன் மீது பொழியப்படட்டும். மேலும் சவால்கள் மற்றும் தடைகளின் விலைகளை உடைக்க நீ பலங்கொண்டு வலிமையாக வளரவேண்டும்., விரைவில் உன் இலக்குகளை அடையவேண்டும்.” என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த ராதிகா காதலுடன் எப்போதும் உன்னுடையவள்” என கூறியுள்ளார்.