saranya ponvannan about actor cheran

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். 'ராம்' படத்தில் நடிகர் ஜீவாவுக்கு அம்மாவாக நடித்ததற்கு தேசிய விருதையும் பெற்றார்.

இந்நிலையில் இவர் அம்மா கதாப்பாத்திரத்தில் நடித்த பல படங்கள் இன்று வரை ரசிகர்கள் மனதை விட்டு நீங்காதவை. அதே போல் இவர் நடிப்பில் வெளிவந்து இயக்குனர் சேரன் நடித்து இயக்கி இருந்த திரைப்படம் 'தவமாய் தவமிருந்து'. இந்த படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. 

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது சரண்யாவுக்கும், நடிகர் சேரனுக்கும் தினமும் சண்டை வந்துக்கொண்டே தான் இருக்குமாம். பல சமயங்களில் காரணமே இல்லாமல் சண்டை போடுவாரம் சேரன். இதனால் சரண்யா தினமும் படப்பிடிப்பின் போது அழுதுக்கொண்டே இருப்பாராம். படக்குழுவினர் தான் இவரை சமாதானப்படுத்துவார்களாம். 

ஒரு கட்டத்தில் சேரனை வெட்டி கொல்ல வேண்டும் என்று கூட நினைத்துள்ளாராம் சரண்யா. இதனை சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும், அந்த படத்தில் நடித்தது மிகவும் மோசமான நாட்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் இந்த படப்பிடிப்பு, முடிந்த அடுத்த நாளே சேரனும் நானும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம். அது எப்படியென்றே இன்று வரை தனக்கு தெரியவில்லை என்றும், இதனால் அவரை எங்கு பார்த்தாலும் தனக்கு வந்துவிடும் என்று கூறியுள்ளார்.