அனிருத்துக்கு போட்டியாக பாலிவுட்டில் களமிறங்கும் சந்தோஷ் நாராயணன்!
Santhosh Narayanan Music for Bollywood Movie : ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் இசையமைப்பாளராக எண்ட்ரி கொடுத்து அனிருத் மாஸ் காட்டிய நிலையில், தற்போது சந்தோஷ் நாராயணனும் பாலிவுட்டில் எண்ட்ரி கொடுக்க உள்ளார்.
பா.இரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். முதல் படத்திலேயே தன்னுடைய இசையாலும் பாடல்களாலும் ரசிகர்களை ஈர்த்த சந்தோஷ் நாராயணன். அடுத்தடுத்து சூது கவ்வும், பீட்சா, ஜிகர்தண்டா, மெட்ராஸ் என பிளாக்பஸ்டர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். அதுவரை இளம் ஹீரோக்களுக்கு இசையமைத்து வந்த சந்தோஷ், படிப்படியாக மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்தார்.
அந்த வகையில் விஜய்யின் பைரவா, ரஜினியின் காலா மற்றும் கபாலி, விக்ரம் நடித்த மகான், தனுஷின் கொடி ஆகிய படங்களில் பாடல்கள் ஹிட் அடித்ததால் சந்தோஷ் நாராயணனுக்கு பான் இந்தியா பட வாய்ப்புகள் தேடி வந்தன. அதன்படி அண்மையில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன் நடித்து பட்டிதொட்டியெங்கும் ஹிட்டான கல்கி 2892ஏடி திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்து இருந்தார்.
இதையும் படியுங்கள்... தன்னை விட 7 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்த சந்தோஷ் நாராயணன்.. அவங்களும் பிரபல பாடகி தான்..
கல்கி படத்தின் வெற்றிக்கு பின்னர் சந்தோஷ் நாராயணனுக்கு பாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய படங்களுக்கு மட்டும் இசையமைத்து வந்த சந்தோஷ் நாராயணன், முதன்முறையாக இந்தி படம் ஒன்றிற்கு இசையமைக்க உள்ளார். அந்த படத்தில் சல்மான் கான் தான் நாயகனாக நடிக்கிறார். அது வேறெதுவுமில்லை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சிக்கந்தர் படத்துக்கு தான் இசையமைக்க உள்ளார் சந்தோஷ் நாராயணன்.
கடந்த ஆண்டு அனிருத் ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமாகி மாஸ் வெற்றியை ருசித்த நிலையில், தற்போது சந்தோஷ் நாராயணனும் சல்மான் கான் படம் மூலம் பாலிவுட்டில் எண்ட்ரி கொடுக்க உள்ளதால் அவரது இசைக்கும் அங்கு ஏகோபித்த வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தோஷ் நாராயணன் தற்போது தமிழில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள சூர்யா 44 படத்துக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Santhosh Narayanan Net Worth: 12 வருடத்தில் அசுர வளர்ச்சி கண்ட சந்தோஷ் நாராயணனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா