விஜய் ரசிகர்கள் மத்தியில், தற்போது 'பிகில்' சத்தம் ஓய்ந்த நிலையில், அடுத்ததாக தளபதி நடித்து வரும் 64 ஆவது படம் பற்றிய தகவலை பற்றித்தான் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும், குறைவில்லாமல் ஏற்கனவே சென்னையில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், தற்போது இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது.

இதில் விஜய், மாளவிகா மேனன், சாந்தனு, உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு நடித்து வருகிறார்கள். அவ்வப்போது விஜய்யின் தீவிர ரசிகரும் நடிகருமான சாந்தனு, 64 ஆவது படம் குறித்து ஏதேனும் சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இப்போது, சாந்தனு இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, அமைதியாக இருங்கள், லோகேஷை நம்புங்கள் என ஒரு பதிவை போட்டுள்ளார். மேலும் இதில் நெருப்பு மற்றும் ஸ்மைலி ஈமோஜுகளை பயன்படுத்தியுள்ளார்.

இதில் இருந்து அனல் பறக்கும் அளவிற்கு இந்த படம் உருவாகி வருவதை சூசகமாக தெரிவித்துள்ளார் சாந்தனு, என்று விஜய் ரசிகர்கள் இந்த தகவலை வைரலாக்கி வருகிறார்கள்.