காமெடியா ? காதலா ? ...சந்தானத்தின் புதிய முடிவு..!!!!

தில்லுக்கு துட்டு , இனிமே இப்படித்தான்,வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என ஹீரோவாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சந்தானம் பிசியாக இருக்கிறார். அவரின் முந்தைய படமான தில்லுக்கு துட்டு வணிக ரீதியாக விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபத்தை ஈட்டி தந்தது.

தற்போது சர்வர் சுந்தரம், சக்கப்போடு போடு ராஜா, ஓடி ஓடி உழைக்கணும் ஆகிய திரைப்படங்கள்  காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகவே உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘மன்னவன் வந்தானடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. வழக்கமான செல்வராகவன் ஸ்டைல் காதல் படங்களை ஞாபகப்படுத்துவதுபோல்  வித்தியாசமான ஸ்டைலில்  உள்ளதால்  சந்தானத்திற்கு ‘காதல் மன்னன்’ இமேஜ் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘மன்னவன் வந்தானடி’ படத்தின் முதல்  ஷெட்யூலைத் தொடர்ந்து அடுத்த ஷெட்யூலுக்காக நியூ யார்க் செல்கின்றனர் செல்வராகவன் குழுவினர் .

 

இனி காதல் படங்களில் கவனம் செலுத்த சந்தானம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது