santhanam sarva sundharam movie updated news

அறிமுக இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள சர்வர் சுந்தரம் படம் சந்தானம் கேரியரிலேயே மிகப்பெரிய படமாக அமைந்திருக்கிறது.

கெனன்யா ஃபிலிம்ஸ் ஜே செல்வக்குமார் தயாரித்துள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது. குறைந்த காலத்திலேயே 1 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கது.

ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் பிரமாண்டமான காட்சியமைப்புகள், கலர்ஃபுல்லான விஷூவல் மற்றும் சந்தானத்தின் மாறுபட்ட தோற்றத்தை வெகுவாக பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தை பற்றி கூறியுள்ள இயக்குனர் பால்கி, "படத்தை சென்சாருக்கு அனுப்பியிருக்கிறோம், ஜுன் மாத இறுதியில், ரம்ஜான் பண்டிகையை ஒட்டி எங்கள் படம் ரிலீஸ் ஆகும் என உறுதியாக நம்புவதாக கூறியுள்ளார்.

பண்டிகை சூழல் எங்கள் படத்துக்கு பொருத்தமானது, கதையும் அதற்கேற்ற வகையில் இருக்கும், ரசிகர்களுக்கு நிச்சயம் தீனி போடும் இந்த சர்வர் சுந்தரம். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். மொழி எல்லைகளை கடந்து சந்தானத்தின் மார்க்கெட் விரிவடைந்திருப்பதையே இது காட்டுகிறது" என மகிழ்ச்சியோடு கூறினார் இயக்குனர் பால்கி.