Asianet News TamilAsianet News Tamil

ஓடிடிக்கு போன சந்தானம் படம்... ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு...​ !

சந்தானம் 3 கெட்டப்புகளில் நடித்துள்ள இந்த படத்தை வாங்க ஜீ5 ஓடிடி தளம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. 

santhanam dikkiloona movie is out on zee5 OTT on September 10
Author
Chennai, First Published Aug 18, 2021, 6:50 PM IST

எழுத்தாளரும் புதுமுக இயக்குநருமான கார்த்திக் யோகி இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட் உருவாகி திரைப்படம் “டிக்கிலோனா”. நடிகர் சந்தானத்துடன்,  சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். அவருடன் யோகிபாபு, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், முனிஷ்காந்த் என மிகப்பெரிய காமெடி பட்டாளமே களம் இறங்கியுள்ளது. இது எல்லாம் போதாது என்று அனகா, ஷிரின் என்ற இரண்டு ஹீரோயின்கள் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்துள்ளனர். 

santhanam dikkiloona movie is out on zee5 OTT on September 10


“பலூன்” படத்தை தயாரித்த சினிஷ் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.கேஜேஆர் ஸ்டுடியோஸ் இந்த படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது. படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிக்கப்பட்டு போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளுக்கு தற்போது முடிக்கப்பட்டு படம் திரையரங்கில் ரிலீஸ் செய்ய தயாராக இருந்தது.

santhanam dikkiloona movie is out on zee5 OTT on September 10

ஆனால் கொரோனா தலை தூக்கியதன் காரணமாக, திரையரங்குகள் அனைத்தும் மூடியே கிடைப்பதால், தற்போது திரையரங்கில் வெளியிடும் எண்ணத்தை மாற்றிக்கொண்டு, ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர். சந்தானம் 3 கெட்டப்புகளில் நடித்துள்ள இந்த படத்தை வாங்க ஜீ5 ஓடிடி தளம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. தற்போது அது உறுதியாகியுள்ளது. சந்தானத்தின் 'டிக்கிலோனா' படம் செப்டம்பர் 10ஆம் தேதி அன்று வெளியாகும் என்று ஜீ5 ஓடிடி தளத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios