Asianet News TamilAsianet News Tamil

Agent Kannayiram teaser : சந்தானத்தின் ஏஜென்ட் கண்ணாயிரம்..வெளியான சிறுது நேரத்தில் ட்ரீண்டிங் நம்பர் 1 ..

Agent Kannayiram teaser : சந்தானம் நடிக்கும் ஏஜென்ட் கண்ணாயிரம் டீசர் நாளை காலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த டீசரை ஆர்யா, ஜீவா இருவரும் வெளியிடவுள்ளனர்.

Santhanam Agent Kannayiram Teaser Will Be Out On Jan 21st..
Author
Chennai, First Published Jan 20, 2022, 8:35 PM IST

சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளி திரையில் கலக்கி வரும் சந்தானம துணை நடிகராக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். நக்கலுக்கு பெயர் போன சந்தானம் விஜய், உதயநிதி, ஆர்யா, அஜித், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களின் தோழனாக நடித்துள்ள காட்சிகள் மனதில் பதிந்தவையாகவே இருக்கும். பின்னர் கமெடியனிலிருந்து நாயனாக தன்னை திசை திருப்பிய சந்தானம் காமெடி சார்ந்த கதைகளையே தேர்ந்தெடுத்து வருகிறார்.

sabhaapathy movie trailer

அந்த வகையில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் முதல் சமீபத்தில் வெளியான டிக்கிலோனா வரை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இவரது நடிப்பில் வந்த படங்களின் வெற்றியில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பினும் தனது பாதையை மாற்றாத நடிகர் சந்தானம் தற்போது 'சபாபதி' என்னும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஸ்ரீனிவாச ராவ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சந்தானத்துடன் எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படமும் வருகிற நவம்பர் 19-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இதைத்தொடர்ந்து Manoj Beedha இயக்கத்தில் தற்போது  ஏஜென்ட் கண்ணாயிரம் என்கிற படத்தில் சந்தானம் நடித்து வருகிறார். ஏஜென்ட் கண்ணாயிரம் 2019 தெலுங்கில் வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா படத்தின் அதிகாரப்பூர்வமான தமிழ் ரீமேக். தெலுங்குப் படத்தில் நவீன் பொலிஷெட்டி நடித்திருந்தார். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. \

Santhanam Agent Kannayiram Teaser Will Be Out On Jan 21st..

சந்தானம் துப்பறியும் நிபுணராக நடிக்கும் இந்தப் படம் நகைச்சுவை கலந்த திரில்லர் கதையில் உருவாகி வருகிறது. இப்படத்தில் சந்தானத்துடன் ஊர்வசி, குக் வித் கோமாளி புகழ், முனீஸ்காந்த் உட்பட பலர் நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தை வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய மனோஜ் பீத்தா இயக்கி வருகிறார். இப்படத்தின் டீசர் ஜனவரி 21ம் தேதியான நாளை காலை 10:15க்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த டீசரை ஆர்யா, ஜீவா இருவரும் வெளியிடவுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios