பிரபல காமெடி நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'தில்லுக்குதுட்டு' திரைப்படம் வெற்றி பெற்றது.  இந்த படத்தை சந்தானத்தின் நண்பர் ராம்பாலா இயக்கியிருந்தார்.  தேனாண்டாள் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.   ஹாரர் படமாக எடுக்கப்பட்ட இந்த படத்தில், சந்தானத்திற்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. 

அதனால், இந்த படத்தை தொடர்ந்து 2018  ஆம் ஆண்டு 'தில்லுக்குதுட்டு 2  படத்தை, சந்தானமே  நடித்து தயாரித்து இருந்தார். முதல் பாகம் அளவிற்கு இல்லை என்றாலும்,  இந்த படமும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ரசித்து பார்க்க கூடிய படமாக இருந்தது. இயக்குனர் ராம்பாலா தான் இப்படத்தையும் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தின் மூன்றாம் பாகத்தையும் எடுப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.  மற்ற இரண்டு பாகங்கள் போல் இல்லாமல் இப்படத்தை  3டி தொழில்நுட்பத்தில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தையும் கடந்த இரண்டு பாகங்களை இயக்கிய இயக்குனர் ராம்பாலா இயக்க உள்ளார். மேலும் தற்போது சந்தானம் நடித்து வரும் டகால்டி படத்தை தயாரித்து வரும் ஆர்.பி.சவுத்திரி இப்படத்தை  தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழில் காஞ்சனா திரைப்படத்தை 3 பாகங்கள் வரை இயக்கி, நடித்து  வெற்றி கண்ட , லாரன்ஸை மிஞ்சும் அளவில் தில்லுக்கு துட்டு படத்தை 3டி தொழில்நுட்பத்தில் நடித்து ரசிகர்களை மிரட்ட உள்ளார் சந்தானம்.