santha brother in law marriage
நடிகர் நாகார்ஜுனா வீட்டில் சமீபத்தில் தான் கெட்டி மேளம் கொட்டியது. அது வேற யாருக்கும் இல்ல நம்ப பல்லாவரத்துப் பொண்ணு சமந்தாவுக்கும் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவிற்கும் தான். 
பிரமாண்டமாக நடந்த இந்த திருமணத்தில் பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டு இவர்களை வாழ்த்தினர். திருமணத்தைத் தொடர்ந்து நடிப்புக்கு கேப் விடுவார் சமந்தா என்று பலரும் எதிர்ப்பார்க்க, தற்போது மீண்டும் நடிப்புக்களத்தில் இறங்கி கலக்கி வருகிறார்.
சமந்தா நாகசைதன்யா திருமணத்தை தொடர்ந்து தற்போது நாகர்ஜுனாவின் இரண்டாவது மகன் அகிலுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. 
ஏற்கனவே அகிலுக்கும் பிரபல காஸ்டியூம் டிசைனர் ஸ்ரேயா பூபால் என்பவரும் காதலித்து வந்தார். இவர்களுக்கு மிக பிரமாண்டமாக நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் திடீர் என இவர்கள் இருவருக்குள்ளும் சில கருத்து வேறுப்பாடு ஏற்பட்டதால் இவர்களுடைய திருமணம் நின்றுவிட்டது.
இந்நிலையில் அகிலுக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்க்கும் படலம் நடைப்பெற்றது. இவருக்கு தற்போது பிரபல நடிகரான ராம் சரணின் மனைவியின் உறவினர் அனிந்தித் என்பவரை திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
