பிரபல இந்தி நடிகர்  சஞ்சய் தத் பெண்களை மயக்க என்னென்ன மோசடிகள் செய்தார், அவர் 308 பெண்களுடன் படுத்து தூங்கியுள்ளார் என அவரது தனிப்பட்ட வாழ்க்கையை சினிமாவாக எடுத்து அம்பலப்படுத்தியுள்ளார் பாலிவுட் இணக்குநர் ராஜ்குமார் ஹிரானி.

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் எப்போதுமே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர். ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து கொண்ட சஞ்சய் தத், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மான்யதா என்ற பெண்ணை மூன்றாவதாக திருமணம்செய்து கொண்டார்,.

பாலிவுட் நட்சத்திரங்கள் சுனில் தத் மற்றும் நர்கிஸ் தத் ஆகியோருக்கு மகனாய்  பாலிவுட்டில் நுழைந்த சஞ்சய் தத் பின்னாளில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றார். 

 

போதை வஸ்துக்கு அடிமை, 1993-ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பில் தொடர்பு, சிறைவாசம், நட்சத்திர குடும்பத்தில் வாரிசு வாழ்க்கை எனப் பலதரப்பட்ட வாழ்க்கையை அனுபவித்து வருபவர் சஞ்சய் தத்.

இந்நிலையில்  த்ரீ இடியட்ஸ்', `பி.கே' படங்களை இயக்கிய ராஜ்குமார் ஹிராணி சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றை சஞ்சு என்ற பெயரில் படமாக்கியுள்ளனர். ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ள இந்த படத்தில் ரன்பிர் கபூர் சஞ்சய் தத்தாக நடித்துள்ளார்.

அந்த படத்தின் டிரெய்லரில் ஒரு காட்சியில், தத் தன் வாழ்க்கையில் சுமார் 308 பெண்களுடன் தூங்கி உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படம் ஜூன் 29 ந்தேதி வெளியாகிறது

மேலும் அந்தப்படத்தில் சஞ்சய் தத்  வாழ்க்கையில் நடந்த பல சர்ச்சைக்குரிய சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன.

தான் டேட் செய்யும் பெண்ணை ஒரு கல்லறைக்கு அழைத்துச் சென்று இது என் தாயின் கல்லறை என்பார். அந்த பெண்ணும் எமோஷனலாகி சஞ்சய் சொல்வதை எல்லாம் கேட்பார். உண்மையில் அந்த கல்லறை அவருடைய தாயுடையது இல்லை. இப்படி தான் சஞ்சய் பெண்களை ஏமாற்றுவார் என்று ராஜ்குமார் ஹிரானி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் தத் வாழ்வில் பல பெண்கள் இருந்தனர். தனது தாயின் கல்லறை என்று கூறி அவர்களை அழைத்துச் சென்று என் தாயை பாருங்கள் என்று அவர் கூறியதும் பெண்கள் சென்டிமென்டாக விழுந்துவிடுவார்கள் என்று சஞ்சு திரைப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சஞ்சய்தத் மாதுரி தீட்சித், டினா மூனிம் மற்றும் ரிச்சா ஷர்மா போன்ற பல நடிகைகளுடன் காதல் கொண்டிருந்தார் என்பது  பாலிவுட் வட்டாரங்களில் அனைவருக்கும் தெரிந்த ரகசியம்.