Asianet News TamilAsianet News Tamil

Bharathi kannamma : பாரதி கண்ணம்மா சீரியலில் புது ஹீரோவாக களமிறங்கும் பிக்பாஸ் பிரபலம்... யார் தெரியுமா?

Bharathi kannamma : பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் அருண் பிரசாத் விரைவில் விலக உள்ளதாக கூறப்படுகிறது, இதனால் அடுத்த பாரதியாக யார் நடிக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்த வண்ணம் உள்ளது.

Sanjeev Venkat likely to replace arun prasadh in Bharathi kannamma serial
Author
Tamil Nadu, First Published May 17, 2022, 2:33 PM IST

சினிமா பிரபலங்களை விட சின்னத்திரை பிரபலங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக மவுசு உண்டு. சீரியல்கள் தினந்தோறும் ஒளிபரப்பப்படுவதால் அதில் நடிக்கும் நடிகர், நடிகைகளை தங்கள் வீட்டில் ஒருவராக மக்கள் பார்த்து வரும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தொடர்களில் பாரதி கண்ணம்மா சீரியலும் ஒன்று.

கடந்தாண்டு வரை டி.ஆர்.பி.யில் முதலிடத்தில் இருந்த இந்த தொடர், அதிலிருந்து அடுத்தடுத்து முக்கிய நடிகர், நடிகைகள் விலகியதன் காரணமாக கடும் சரிவை சந்தித்தது. குறிப்பாக இதில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினிக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது. அவர் விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக வினுஷா என்பவர் தற்போது கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.

Sanjeev Venkat likely to replace arun prasadh in Bharathi kannamma serial

இதனிடையே இதில் பாரதியாக நடித்து வரும் அருண் பிரசாத்தும் விரைவில் விலக உள்ளதாக கூறப்படுகிறது, இதனால் அடுத்த பாரதியாக யார் நடிக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரும், பிக்பாஸ் பிரபலமுமான சஞ்சீவ், பாரதியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே பல்வேறு சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் என்பதால் அவர் இந்த தொடருக்கு பொருத்தமாக இருப்பார் எனக் கருதி ஒப்பந்தம் செய்துள்ளனர். அவரின் வருகைக்கும் பின் அந்நிகழ்ச்சியின் டி.ஆர்.பி மீண்டும் டாப்புக்கு வருமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... KGF 2 : ‘கே.ஜி.எஃப் 2’ படம் பார்த்து மெர்சலான இயக்குனர் ஷங்கர்... ‘பெரியப்பா’ அனுபவம் வேறலெவல் என புகழாரம்

Follow Us:
Download App:
  • android
  • ios