சீரியல்களில் காதலர்களாக நடிக்கும், நடிகர் நடிகைகள், சில சமயங்களில் உண்மையாகவே காதலிக்க துவங்கி விடுகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' தொடரில் கதாநாயகன், நாயகியாக நடித்த ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் ஆலியா தற்போது நிறைமாத கர்ப்பமாக உள்ளார். ஜனவரி மாதம் ஆலியாவிற்கு, வளைகாப்பு நடந்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார் சஞ்சீவ். 

மேலும் அடிக்கடி, தங்கள் இவருடைய புகைப்படத்தையும் வெளியிட்டு தங்களுடைய அன்பை ரசிகர்களுக்கு வெளிக்காட்டி வரும் சஞ்சீவ், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலர் இவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறாரார்கள்.

மேலும் செய்திகள்: குழந்தை பெற்ற பின் பேரழகியாக மாறிய அஞ்சனா!  ஸ்டைலிஷ் சேலையில்... விதவிதமான வெளியிட்ட கிளிக்ஸ்!
 

கர்ப்பமாக இருக்கும் ஆலியாவின் வயிற்றில் கை வைத்து, நீங்கள் தான் என் வாழ்க்கை... என பதிவிட்டுள்ளார். மேலும் ஆலியாவிற்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் அவர்கள் நலமுடன் வாழ ஈடு இணையில்லா தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சஞ்சீவ் தற்போது, காற்றின் மொழி என்கிற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு 'ராஜா ராணி' சீரியலுக்கு கிடைத்தது போலவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

They are my life 😍😘 @alya_manasa

A post shared by sanjeev (@sanjeev_karthick) on Feb 17, 2020 at 12:25am PST