sanjay talk about her friend vijay
இளைய தளபதி விஜய் இன்று மிக பெரிய நடிகராக இருந்தாலும் என்றுமே அவருடைய நண்பர்களை விட்டுக்கொடுத்ததே இல்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவருடைய நண்பர்களுடன் யாருக்கும் தெரியாமல் ஊர் சுற்ற கிளம்பிவிடுவார்.
இவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர் சின்னத்திரை மற்றும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள சஞ்சய்.
இவர் ஒரு முறை தன்னுடைய நண்பர் விஜயை பற்றி கூறும்போது. விஜய்க்கும் எனக்கும் சண்டை வந்தால் இருவரும் போன் செய்து ஹலோ என்கிற வார்த்தையை கூட கூறாமல் யார் முதலில் பேசுவது என்று காதிலேயே வைத்திருப்போம்.

பின் விஜயை ஹலோ என்று முதலில் சொல்வார் பின் தான் நான் பேசுவேன். அதே போல் விஜயால் தான் என் மனைவியிடமும் குழந்தையிடமும் நான் திட்டு வாங்கிவேன்.
காரணம் எங்காவது வெளியே நண்பர்கள் அனைவரும் சுற்றுலா சென்றால் விஜய் அவருடைய மனைவி சங்கீதா மற்றும் குழந்தைகளுக்கு வாங்குவதுபோலவே. என் குழந்தைகளுக்கும் சேர்த்து வாங்கிவிடுவார்.
இதை பார்த்து என் மனைவி விஜய் அண்ணா வாங்கி எனக்கு குழந்தைகளுக்கு வாங்கி தராங்க இதெல்லாம் உங்களுக்கு தோனாதா? என என்னை திட்டுவார் என மிகவும் மகிழ்ச்சியோடு ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
