இதில், 'டிக் டிக் டிக்' படத்திற்கு மட்டுமே இவரது நடிப்புக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. போலீஸ் அதிகாரியாக அவர் நடித்த 'திமிரு புடிச்சவன்' படத்திற்கு அப்படி ஒன்றும் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய நிவேதா பெத்துராஜுக்கு, அங்கேயும் எதிர்பார்த்த வரவேற்பில்லை. 

எப்படியாவது, தமிழில் முன்னணி ஹீரோயின் அந்தஸ்தை பெற வேண்டும் என்ற முடிவோடு இருக்கும் அவர், அடிக்கடி ஹாட் ஃபோட்டோ ஷுட் நடத்தி, கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். 

தற்போது, வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி', விஷ்ணு விஷாலின் 'ஜெகஜால கில்லாடி', பிரபுதேவாவின் 'பொன் மாணிக்கவேல்' என வரிசையாக நிவேதா பெத்துராஜின் படங்கள் ரிலீசுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன. இருந்தாலும், அவர் மிகவும் நம்பியிருப்பது மக்கள் செல்வன் விஜய்சேதுபதியுடன் நடித்துள்ள 'சங்கத்தமிழன்' படத்தைதான்.


முதல் முறையாக இரட்டை வேடங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ள இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்.

இன்னொரு ஹீரோயினாக ராஷி கண்ணாவும் நடித்துள்ளார். 'வாலு' படத்தின் ஹிட்டை தொடர்ந்து, விஜய் சந்தர் இயக்கத்தில் பக்கா கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள 'சங்கத்தமிழன்' படம், வரும் நவம்பர் 15ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது.
வழக்கமாக நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வந்த படங்கள் போதுமான வரவேற்பு பெறாததால், அந்த வரிசையில் சங்கத்தமிழன் படமும் இடம்பெற்றுவிடுமோ? என்ற வருத்தம் ரசிகர்களிடையே இருந்து வருகிறது.


எனினும், இதுவரை இல்லாத புதிய காம்பினேஷனான விஜய் சேதுபதி – நிவேதா பெத்துராஜ் ஜோடி, ரசிகர்களை வசீகரிக்கும் என தெரிகிறது. அதற்கு சான்று, படத்தில் இடம்பெற்றுள்ள சண்டக்காரி நீதான் பாடல்தான்.  

இந்தப் பாடலில் இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரியை பார்க்கும் பொழுது, விஜய்சேதுபதி - நிவேதா பெத்துராஜ் காம்பினேஷனுக்கு மாஸ் வரவேற்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது.


சமீபத்தில் வெளியான சங்கத்தமிழன் டிரைலரே, சமூக வலைதளங்களை அதிர வைத்த நிலையில், படமும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழ் சினிமாவில் தனது மார்க்கெட்டும் உயரும் என நிவேதா பெத்துராஜ் மிகவும் நம்பியுள்ளாராம்.