Sangamithra At Cannes another epic from Indian Film Industry ready to conquer World

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் உருவாகும் 'சங்கமித்ரா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் படவிழாவில் வெளியானது.

'பாகுபலி' படத்தின் பிரமாண்ட வெற்றியை அடுத்து இந்தியாவில் மிகப்பெரிய பஜெட்டில் உருவாக்கவுள்ள சங்கமித்ரா படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்த நிலையில் இன்று பிரான்ஸ் நாட்டில் தொடங்கிய 'கேன்ஸ்' படவிழாவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது.

உலக சினிமாவே இந்தியாவின் பக்கம் திரும்பியது இல்ல இல்ல தென்னிந்தியா பக்கம் திரும்பியதுன்னு தான் சொல்லணும். ராஜமௌலியின் பிரமாண்ட படைப்பான 'பாகுபலி 2' படத்தின் வெற்றிக்கு பின்னர் இந்திய இயக்குனர்களின் கவனம் சரித்திர படம் இயக்கவேண்டுமென்று சரித்திர கடையை தூசு தட்டுகின்றனர். சரித்திர படத்திற்கு உலகளவில் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், சங்கமித்ரா ஃபர்ஸ்ட்லுக்கை கேன்ஸ் படவிழாவில் வெளியிட்டது.

சரி, சங்கமித்ரா போஸ்டரில் என்னதான் இருக்கிறது? ஒரு கையில் வாளும் இன்னொரு கையில் ராட்சத குதிரையின் கடிவாளத்தையும் பிடித்து கொண்டு கம்பீரமாக மிரட்டும் ஸ்ருதிஹாசன் குதிரையின் மேல் உட்கார்ந்திருக்கும் இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இது எப்படி வரும் என பிரமாண்டத்தை நம் கண்களுக்கு விருந்தாக்கியுள்ளது.

சுந்தர்.சி இயக்கத்தில், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சாபுசிரில் கலை வண்ணத்தில், கமலக்கண்ணன் கிராபிக்ஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.