பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து, நேற்றைய தினம் இசை வித்வான் மோகன் வைத்தியா வெளியேற்றப்பட்டார். இவர் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக எந்த ஒரு கோபங்களையும் சம்பாதிக்க முடியவில்லை என்றாலும், இவரால் பிக்பாஸ் ரசிகர்களை ரசிக்க வைக்கும் வகையில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முடியவில்லை என கூறலாம்.

மோகன் வைத்தியா வெளியில் செல்லும் போது , முதலில் சாண்டி பாடிய பாடலுக்கு கோவப்பட்டாலும், பின் அனைத்து போட்டியாளர்களையும், கட்டி அனைத்து தன்னுடைய நன்றிகளை தெரிவித்து விட்டு வெளியேறினார். சேரன் மற்றும் மீரா மிதுன் ஆகியோருக்கு அட்வைஸ் கொடுத்து விட்டு விடைபெற்றார்.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் சாண்டி , மோகன் வைத்தியா போல் வேடம் போட்டு கொண்டு, அனைத்து போட்டியாளர்களை கட்டி கட்டி தழுவி, அவரை வெறுப்பேற்றி கொண்டுள்ளார். இவர் கலாய்த்து கொஞ்சம் ஓவர் தான் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.