பிக்பாஸ் நிகழ்ச்சியில், அனைவரையும் கிண்டல் செய்யும் ஜாலியான போட்டியாளராக உள்ளவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டி.

வாழ்க்கையில் பல துன்பங்களை கடந்து வந்த போதிலும் அதையெல்லாம் சற்றும், கண்டு கொள்ளாமல்... எப்போதும் கலகலப்பாக இருப்பார். 

இந்நிலையில் இவருடைய அம்மா பற்றி, பிக்பாஸ் கூற சொல்ல நான் மிகவும் ஜாலியான ஆள், எதையும் பெரிதாக எடுத்து கொள்ள மாட்டேன் என சொல்ல துவங்கினார். "என்னுடைய அம்மா ரொம்பா கண்டிப்பானவங்க. ஆனா நான் சின்ன வயசுலேந்தே ரொம்ப வால் பையன்.

ஆறாம் வகுப்பு படிக்கும் போது, வீட்டுக்கு தெரியாமல் பீச்சுக்கு போனேன். நண்பர்களுடன் சேர்ந்து ட்ரெஸ்ஸை அவிழ்த்து வைத்து விட்டு குளித்த போது, யாரோ என்னுடைய உடையை திருடி கொண்டு போய்விட்டனர். 

வீட்டுக்கு போக வேண்டும் என்றால் , பஸ்சில் தான் போக வேண்டும். பீச் ஓரத்தில் இருந்த பழைய உடை ஒன்றை எடுத்து இடுப்பில் மட்டும் கட்டி கொண்டு, எப்படியோ ஒரு வழியாக வீட்டுக்கு போய் சேர்ந்து விட்டேன்.

ஆனால் எப்படி உள்ளே போவது என தெரியவில்லை. வீட்டு வாசலிலேயே என்னுடைய அம்மாவும் நின்று கொண்டிருந்தார். என்ன நடந்தது என்பதை கூறிய பின் இப்படி செய்வியா என கல்லு உப்பை தரையில் கொட்டி, அதன் மீது முட்டி போட வைத்து அம்மி கல்லை கையில் கொடுத்தார் என்று கூறினார். இருந்தாலும் மீண்டும் இதே போன்று தான் செய்து கொண்டு தான் இருந்தேன் என கூறியுள்ளார்.