பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், கவினின் நண்பர் உள்ளே வந்து அவரிடம் சகஜமாக பேசி கொண்டிருந்த காட்சியும், பின் அவர் கவின் கன்னத்தில் ஓங்கி அறைந்த காட்சிகளும் காட்டப்பட்டது.

இதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், சாண்டியின் மனைவி மற்றும் மகள் லாலா உள்ளே வரும் காட்சி காட்டப்பட்டுள்ளது.

முதலில் சாண்டியின் மகள் லாலா உள்ளே வருகிறார். அவரை பார்த்ததும், சாண்டி கட்டி பிடித்து அழுகிறார். இந்த காட்சி பார்க்கும் ரசிகர்கள் மனதையே நெகிழ வைக்கும் விதமாக உள்ளது. அதை தொடர்ந்து சாண்டியின் மனைவி சில்வியா உள்ளே வருகிறார். அவரை அன்பு முத்தத்தோடு வரவேற்கிறார் சாண்டி. 

சாண்டி லாலாவை தூக்கி வைத்திருக்கும் போது, அவருடைய அம்மா கூப்பிட, சாண்டியை இறுக்கமாக பிடித்து கொண்டு குழந்தை காட்டும் பாசம் பார்பவர்களையே கண்கலங்க வைத்துள்ளது என்றே கூறலாம்.

இரண்டாவது ப்ரோமோ இதோ...