பிக்பாஸ் நிகழ்ச்சி, கடந்த இரண்டு சீசனை விட இந்த சீசன் மிகவும் வித்தியாசமானதாக உள்ளதாகவே ரசிகர்கள் கருதுகிறார்கள். முதல் சீசனில், கலந்து கொண்ட போட்டியாளராகளில் ஒருவரான காயத்திரி ஒரு சில சர்ச்சைகளில் சிக்கிய போதும், ஐஸ்வர்யாவை பலர் வெளியேற்ற வேண்டும் என இரண்டாவது சீசன் போது கூறிய போதும், வெளியேற்றாத பிக்பாஸ் தற்போது சரவணன் கல்லூரி காலங்களில் சில சமயம் பெண்களை உரசுவதற்காகவே பயணம் செய்ததாக கூறியதால், திடீர் என நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

மேலும், தற்போது இது வரை பிக்பாஸ் வீட்டிற்குள் வரவே மாட்டேன் என கூறி கொண்டிருந்த நடிகை கஸ்தூரி வேறு , பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கிறார். 

தற்போது அனைத்து போட்டியாளர்களுடனும், கஸ்தூரி பேசி அவர்கள் ஏன் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் என்பது பற்றி கேட்டு வருகிறார். அந்த வகையில், இதுவரை, மக்களிடம் எந்த ஒரு அவப்பெயரையும் எடுக்காமல் விளையாடி வரும் தர்ஷனிடம் "நீ ஏன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாய் என கஸ்தூரி கேட்டார்".

இவரின் இந்த கேள்விக்கு பதிலளித்த, தர்ஷன் " தனக்கு கொஞ்சம் கடன் இருந்தது, அதற்கான நாட்களை கடந்துவிட்டேன், இப்போது நான் ஓகே. இனி வரும் நாட்கள் கொஞ்சம் ஜாலியாகவும், டாஸ்க்கை நல்ல படியாகவும் பண்ணுவேன் என கூறினார்.

இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருந்தபோது, அங்கிருந்த சாண்டி இந்த பிக்பாஸ் வீட்டில் மிக வலிமையான போட்டியாளர் என்றால் தர்ஷன் தான், அவன் கண்டிப்பாக இறுதி போட்டி வரை செல்வான், பிக்பாஸ் சீசன் 3 டைட்டில் வெல்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது என கூறினார்.

ஒரு சக போட்டியாளராக இருந்து கொண்டு, தர்ஷன் வெற்றி பெற வேண்டும் என சாண்டி கூறுவது மட்டும் இன்றி, அவரை ஊக்குவிப்பது போல் பேசியுள்ளது சாண்டி மிகவும் நல்ல மனிதர் என்பதை எடுத்துரைப்பது போல் உள்ளது என கூறிவருகிறார்கள்.