பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் குறைவான ஆட்களே இருந்தாலும், பிரச்சனைகள் மட்டும் முன்பை விட அதிகமாகவே வருகிறது.

இன்று காலை வெளியான ப்ரோமோவில், சாண்டி ஏதோ வேண்டும் என்றே... லாஸ்லியா மற்றும் தான் அமர்ந்து பேசும் போது, குடையை வைத்ததாக கூறினார் கவின். இதற்கு லாஸ்லியாவும் ஒத்து ஊதுகிறார். இதனால் இதுவும் சாண்டியின் ஒரு ஸ்டாட்டர்ஜி  என கூறியதால், சாண்டி எந்த ஒரு வார்த்தையும் பேசாமல் அதிர்ச்சியில் உறைந்தார். 

ஆனால் இதனை பார்த்து கொண்டிருந்த தர்ஷன் கவினை கண்டிப்பது போல் பேசும் காட்சிகளும், ப்ரோமோவில் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில்... கவினிடம் சாண்டி பேசும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இதில் தன்னை தவறாக கவின் நினைத்ததை பற்றி மிகவும் வருத்தத்தோடு சாண்டி பேசும் காட்சி வெளியாகியுள்ளது. இதில் தன்னை மட்டும் தவறாக நினைக்க வேண்டாம் என கண்கலங்கியவாறு கூறியுள்ளார் சாண்டி.

இது குறித்த ப்ரோமோ இதோ...