பிக்பாஸ் நிகழ்ச்சியில், அனைத்து போட்டியாளர்களும் ஒவ்வொறு நடிகர்களின் வேடங்களை ஏற்று அவர்களுடைய பாடலுக்கு நடனமாட வேண்டும் என்பது லக்சுரி டாஸ்காக வைக்கப்பட்டுள்ளது.

 

அந்த வகையில் ஏற்கனவே வெளியான ப்ரோமோவில் இருந்து, 96 த்ரிஷாவாக லாஸ்லியா, சின்ன கவுண்டர் வேடத்தில் சரவணன், மங்காத்தா அஜித்தாக 'கவின்' , சிம்புவாக 'சாண்டி' உள்ளிட்ட பிரபலங்கள் வேடங்களை ஏற்று டான்ஸ் ஆட உள்ளனர்.

அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் சாண்டி வல்லவன் படத்தில் இடம்பெற்ற, 'தத்தை தத்தை' பாடலுக்கு, ரேஷ்மா, லாஸ்லியா, சாக்ஷி, ஷெரின் என அனைத்து பெண் போட்டியாளர்களுடனும் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள  ப்ரோமோ வெளியாகியுள்ளது.