பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருந்தாலும், 100 நாட்கள் தங்களுடைய குடும்பத்தை பார்க்காமல் உள்ள போட்டியாளர்களின், எமோஷனை டச் செய்துள்ளது பிக்பாஸ்.

ஏற்கனவே வெளியான புரோமோவில், லாஸ்லியா ஏர்டெல் 4 ஜி மூலம், தன்னுடைய தந்தையிடம் பேசினார். அதை தொடர்ந்து இப்போது வெளியாகியுள்ள புரோமோவில், சாண்டி தன்னுடைய குடும்பத்தை பார்த்து பேசும் காட்சிகள் வெளியாகியுள்ளது. அழும் போது கூட தன்னுடைய மனைவியை இந்த புரோமோவில் கிண்டலடித்துள்ளார் சாண்டி.


 
ஏர்டெல் 4 ஜி, மூலம் சாண்டி தன்னுடைய மகளை பார்த்து லாலா... லாலா... என பாசமாக அழைக்கிறார். லாலாவும் அப்பாவிற்கு அன்பு முத்தங்கள் கொடுக்கிறார். இதை பார்த்து எமோஷனல் ஆன, சாண்டி அழுகிறார். பின் மனைவியை பார்த்து நீ எப்படிம்மா இருக்க என கேட்க, அதற்கு அவருடைய மனைவி மிகவும் proud ஆக உள்ளது என கூற, அதை கேட்ட சாண்டி... என்ன பவுடர் அடிச்சிக்கிட்டு இருக்கியா என கூறுகிறார்.

அழுதாலும் சாண்டிக்கு கொஞ்சம் கூட ஹியூமர் சென்ஸ் குறைய வில்லை. அதே போல் இன்னும் சில தினங்களில், சாண்டி வெளியே செல்ல உள்ள நிலையில், அழ வைத்து அழகு பார்த்துள்ளார் பிக்பாஸ்.